
பனை விதை நடும் விழா – NSS Units: 216, 217, 219 & 241
அனைவருக்கும் வணக்கம் இனியதாக தொடங்கப்பட்டது பனை விதை நடும் விழா. தூத்துக்குடி மாவட்டம் ஹார்பர் கடற்கரை ஓரமாக காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 217, 216, 219, 241 சேர்ந்த 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 5000 பனை விதைகளை விதைப்பதற்காக நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சமூக நலத்துறை அமைச்சர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்ட செயலாளர் பாசமிகு அண்ணன் அற்புதராஜ் அவர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொடங்கி வைத்தனர்