
நூல் வெளியீட்டு விழா – தமிழ்த்துறை
28.8.24 அன்று காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறையில் (சுயநிதிப்பிரிவு) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. உதவிப் பேராசிரியர் முனைவர் மு.செல்வி அவர்களது முப்பரிமாண வடிவங்கள் எனும் நூல் வெளியிடப்பட்டது. இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவன் சோ.சோலைராஜா தொகுப்புரை ஆற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு தொடங்கியது. இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி ஜா.ரியானி வரவேற்புரை ஆற்றினார். துணைமுதல்வர் முனைவர் அ.அருணாசல ராஜன் அவர்கள் முதல் பிரதியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் முதல் பிரதியை வாங்கிக் கொண்டார். நூல் குறித்து அறிமுக உரை ஆற்றினார். நூலின் ஆசிரியர் முனைவர் மு.செல்வி அவர்கள் ஏற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவன் லட்சுமணன் நன்றியுரை ஆற்றினார்.விழா இனிதே நிறைவுற்றது.