Home Events தொழில்நுட்பப் போக்குகள் பற்றிய விழிப்புணர்வு – தமிழ்த்துறை

தொழில்நுட்பப் போக்குகள் பற்றிய விழிப்புணர்வு – தமிழ்த்துறை

16.02.2024 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த் துறையும் (சுயநிதிப்பிரிவு), காமராசர் கலை இலக்கியக் கழகமும் இணைந்து தொழில்நுட்பப் போக்குகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை மாணவர்களுக்கு நிகழ்த்தினர். கு.அஸ்வதி ராதா , இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி தொகுப்புரை ஆற்றினார்.தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது . சோ.சோலைராஜா இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பு விருந்தினர் திரு. அமச்சார் அரவிந்தசாமி அவர்களைக் கௌரவித்தார். சிறப்பு விருந்தினர் அவர்கள் மாணவர்களுக்கு, கணினி சார்ந்த செயல்முறைகளைப் பற்றி சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு தொழில்நுட்பம் பற்றி விளக்கமாகக் கூறி மாணவர்களோடு கலந்துரையாடினார். மாணவர்களும் நிகழ்வின் இறுதியில் தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர். இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் மா.சீதாராமன் நன்றியுரை கூறினார். தலைவர் , பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Feb 16 2024
Expired!

Time

12:00 pm

Location

Bharathiyar Block

Leave A Reply