
தமிழ் மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைத்தல்
07.05.2022 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மருத்துவ மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் காமராஜ் கல்லூரி சுயநிதிப்பிரிவின் இயக்குநர் முனைவர். அ. அருணாசலராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மூலிகைச்செடியை நட்டுவைத்தார். தமிழ்த்துறையின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர் தாங்கள் கொண்டுவந்த மூலிகைச் செடிகளை ஆர்வத்துடன் நட்டு மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை திருமதி. அ. திலகவதி ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். தமிழ்த்துறைப் பேராசிரியப்பெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் நிறைவாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். க. திலகவதி நன்றியுரை வழங்கினார்.