Home Events - Kamaraj College டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

காமராஜ் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையமும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கமும் இணைந்து கல்லூரி விடுதி மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றி காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காய்ச்சலுக்கான அறிகுறிகள் மற்றும் காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் 03.12.2023 அன்று மாணவ மாணவிகளின் விடுதிகளில் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைக் தொடர்ந்து காய்ச்சல் சுற்றுப்புறங்களில் பரவாமல் பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்க உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட “நிலவேம்பு குடிநீர்” வழங்கப்பட்டது. இந்த நிகழ்வினை காமராஜ் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா. கருப்பசாமி மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்க நிறுவனர் முனைவர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். மாணவர்கள் விடுதி காப்பாளர் முனைவர் ராமர் மற்றும் மாணவிகள் விடுதி காப்பாளர் முனைவர் மதுமிதா ஆகியோர் முன்னிலையில் விடுதி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

Leave A Reply