
செந்தமிழ் இலக்கியப் பேரவை -‘சிகரம் தொடுவோம்’
தமிழ்த்துறை செந்தமிழ் இலக்கியப் பேரவை சார்பாக 31.03.2022 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு காமராஜர் கல்வி அரங்கத்தில் சங்க நாதம் முழங்க விழாத் தொடங்கியது. மாணவச் செயலாளர் முதலாமாண்டு விலங்கியல் துறை மாணவி சி.மாரிச் செல்வி வரவேற்புரை வழங்கினார். முதல்வர் முனைவர் து. நாகராஜன் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். முதலாமாண்டு உரைநடை ‘உரை அமுதம்’ நூல் தொகுப்பாசிரியரும் ‘இளைஞனே நீ பாதை மாறலாமா’ என்ற கட்டுரையாசிரியருமான தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கெ. செல்லத்தாய் அவர்கள் ‘சிகரம் தொடுவோம்’ எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாணவத் தலைவர் ர. நந்தினி நன்றியுரை கூறினார். இவ்விழாவில் முதலாமாண்டு மாணவர்கள் 450 பேர் கலந்து கொண்டார்கள். இவ்விழா நிகழ்வினை வேதியியல் துறை மாணவி திவ்யாவும் கணிதத்துறை மாணவர் ராம்குமாரும் தொகுத்து வழங்கினார்கள். கணிதத்துறை மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவுற்றது. தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து விழாவினை நடத்தினார்கள்.