
சிறப்பு விருந்தினர் விரிவுரை – Tamil Dept.
30.1.23 காலை 10 மணி அளவில் தமிழ்த்துறை சார்பாக சிறப்பு விருந்தினர் விரிவுரை நிகழ்வு நடைபெற்றது. மு.முத்துக்குட்டி இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு மாணவி தொகுப்புரையாற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. சு.நந்தகுமார் இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவன் வரவேற்புரை ஆற்றினார் . துணை முதல்வர் முனைவர் அ. அருணாசலராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினரை கௌரவித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சுயநலத்தின் கலை எனும் தலைப்பில் சிறப்பு விருந்தினர் முனைவர் ச.தனவதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார் .
கொ.மணிகண்டன் இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவன் நன்றியுரை கூறினார். தேசிய பண்ணோடு நிகழ்வு முடிந்தது. தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.