Home Events - Kamaraj College சிறந்த உன்னத பாரத் அபியான் விருது – 2024

சிறந்த உன்னத பாரத் அபியான் விருது – 2024

இந்திய அரசின் உன்னத பாரத் இயக்கம் திட்டமானது உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களின் சமூக பணிகள் மற்றும் கிராம புற வளர்ச்சிக்கானது. கல்வி கற்கும் காலத்திலிருந்தே மாணவர்கள் தங்களை கிராம பொருளாதார மேம்பாடு, கிராம நிர்வாகம், உள் கட்டமைப்பு, திறன் சார் பயிற்சிகள், மாற்று எரசக்தி பயன்பாடு, விவசாயம் , சமூக நீதி உள்ளிட்ட கருத்துருக்கள் கொண்டு சமூக சேவையில் தங்களை இணைத்துக் கொள்ள உன்னத பாரத் அபியான் செயல் படுகிறது. ஆகஸ்ட் 7 அன்று திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம் பல்கலைகழகத்தில் நடை பெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் 2023 – 2024 க்கான சிறந்த உன்னத பாரத் அபியான் கல்லூரி விருது மற்றும் சிறந்த உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சிறப்பாக செயல் படும் உன்னத பாரத் இயக்க கல்லூரிகளில் ஒன்றாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி தேர்வு செய்ய பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில் தேசிய உன்னத பாரத் இயக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் திரு . விவேக் குமார் , ஐ ஐ டி , புது டில்லி மற்றும் அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் திரு.ரவி அவர்கள் கலந்து கொண்டு விருதுகள் வழங்கினார்கள். காமராஜ் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் திரு. ராம சந்திரன் , கல்லூரி துணை முதல்வர் முனைவர்.A. அசோக் மற்றும் கல்லூரியின் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் ஜெ. நாக ராஜன் ஆகியோர் விருதுகளை பெற்று கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம் பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழு்தானது.

Leave A Reply