
சித்திரை தேரோட்டம்: பொது பணி – NSS Units 217 & 241
தூத்துக்குடியில் (23 /04 /2024) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோயிலும், காமராஜர் கல்லூரியின் பொருளாதாரத் துறை (SF), மற்றும் NSS Unit 241 & 217 சார்பாக சுமார் 150 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு, பொது மக்களுக்கும் கோயில் நிர்வாகத்தினருக்கும் தங்களது பணிகளை திறம்பட செய்தனர். சித்ரா பௌர்ணமியின் சிறப்பு “மனிதனை வாழ்க்கையில் நல்ல செயல்கள் செய்யும்படி அறிவுறுத்தும் திருநாளாக இந்நாள் கொண்டாடப்படுகிறது” தேருக்கு முன்னால் சென்ற நாட்டுப்புற கலைகளை முன் நின்று திறம்பட வழி நடத்தினர் எம் மாணவ,மாணவிகள். பொது மக்களுக்கு தேவையான குளிர்பானங்கள் வழங்கி, தேர் சிறப்பாக கோயிலை வந்தடைய செய்தனர். இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் Dr.M.சந்திரா (Unit 241) மற்றும் Dr.G. ஆனந்தராஜ் (Unit 217) ஆகிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களும் கலந்து கொண்டார்கள். மாணவர்களின் சிறப்பான பணியினைக் கண்ட கோயில் நிர்வாகம் அவர்களை பாராட்டி பிரசாதம் வழங்கியதோடு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. மேலும் பொது பணிகளை சிறப்பாக செய்ததற்காக பொதுமக்களும் மாணவ மாணவிகளை பாராட்டினார்கள்.