
சங்க இலக்கியத்தில் மருத்துவக் கூறுகள் – ஒரு நாள் பயிலரங்கம்
26.9.22அன்று காமராஜ் கல்லூரி சுயநிதிப்பிரிவின் தமிழ்த்துறை சார்பாக ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு தொடங்கியது. இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவன் மா.பாரதி கண்ணன் தொகுப்புரையாற்றினார். மு.முத்துக்குட்டி இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி வரவேற்புரை ஆற்றினார் . துணை முதல்வர் முனைவர் அ.அருணாசல ராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார் .மூன்று அமர்வாகப் பயிலரங்கம் நடைபெற்றது. இரா. அனுசியா உதவிப் பேராசிரியர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி. மு. சுதனா உதவிப் பேராசிரியர், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி- குற்றாலம். இரா .இந்து பாலா உதவிப் பேராசிரியர், திருவள்ளுவர் கல்லூரி – பாபநாசம். ஆகியோர் பயிலரங்கில் சிறப்புரையாற்றினர். மா. முத்துக்குமார் உதவிப் பேராசிரியர் தமிழ் துறை பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க. திலகவதி, தமிழ்த்துறைப் பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் இணைந்து பயிலரங்கினைச் சிறப்பாக நடத்தினர். முடிவுரையை இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி வெ.கனக லட்சுமி வழங்கினார் தேசியப் பண்ணோடு நிகழ்ச்சி நிறைவாக முடிந்தது.