Back
Home Events காமராசர் இலக்கிய கழகம் துவக்கவிழா

காமராசர் இலக்கிய கழகம் துவக்கவிழா


26.9.2022 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவு சார்பாக காமராசர் இலக்கிய கழகம் துவக்கவிழா நடைபெற்றது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களும், துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்களும் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி காமராசர் இலக்கியக் கழகத்தைத் துவக்கி வைத்தனர். மு. அஸ்வதி ராதா இளங்கலை முதலாம் ஆண்டு மாணவி இந்நிகழ்வின் தொகுப்புரையை வழங்கினார். வரவேற்புரையை சு.நந்தகுமார் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவன் தொடங்கி வைத்தார். தலைமை உரையை முனைவர் மு. அருணாசல ராஜன் அவர்கள் ஆற்றினார் .சிறப்புரையை சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் ஆற்றினார். மாணவர்கள் சோ. தர்மன் அவர்களோடு கலந்துரையாடல் செய்தனர். ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி,தூத்துக்குடி. போப் கல்லூரி, சாயர்புரம். C.S.I கல்லூரி, நல்லூர் .மேலும் முனைவர் பட்ட ஆய்வாளர்களும், பிற கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்களும் ,தமிழ்த்துறைப் பேராசிரியர் பெருமக்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக நடத்தினர். முடிவுரையை இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி சு.அனுசியா நிகழ்த்தினார்.

Date
Sep 26 2022
Expired!
Time
10:00 am
Location
Seminar Hall - Golden Jubilee Block
Other Locations

Leave A Reply