Home Events காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் – UBA

காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் – UBA

காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் – UBA காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் பங்கேற்பு – அக்டோபர் 02, 2024.
2025 – 2026 நிதியாண்டிற்கான வளர்ச்சி திட்டங்களை தயாரிக்கும் நோக்கில் காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு கூட்டங்களை நடத்திட மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் முடிவு செய்து அதன் படி நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டங்கள் நடை பெறுகிறது. கிராம பஞ்சாயத்துகள் மேம்படுத்தும் திட்டங்களை( பிடி பி) மற்றும் அனைவரையும் பங்கு கொள்ள செய்யும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ” மக்கள் திட்டங்களுக்கான பிரச்சாரத்தின் கீழ் 20,000 கல்லூரி மாணவர்களுக்கு இந்தியா முழுவதும் பயிற்சி அளிக்க பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் , சேர்வைகாரன்மடம் கிராம சபை கூட்டங்களில் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ .நாக ராஜன் மற்றும் மாணவர்கள் G. சரண் குமார் , P. ஜேசு ஸ்டெலின் (முதலாம் ஆண்டு பொருளாதார துறை) பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் உள்ளூர் சார்ந்த நீடித்த வளர்ச்சி இலக்குகள் (எல்எஸ் டி ஜி) மற்றும் பஞ்சாயத்து மேம்பாட்டு குறியீடு (பி டி ஐ) ஆகியவற்றை தயாரிப்பதில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உதவி புரிய உள்ளனர். மேலும் தாயின் பெயரில் மரம் நடும் முன்னெடுப்பு கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து பகுதியில் 75 மரக்கன்றுகளை நட தீர்மானிக்க பட்டுள்ளது. கிராம சபை ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர்கள் திருமதி மாரியம்மாள் மற்றும் திருமதி கோமதி ஆகியோர் செய்து இருந்தனர். புரோஜெக்ட் திட்ட அறிக்கை செயல்படுத்திட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது.

Date

Oct 02 2024
Expired!

Time

10:30 am - 1:00 pm

Leave A Reply