
கல்லூரி சந்தை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், தூத்துக்குடி மற்றும் காமராஜ் கல்லூரி இணைந்து நடத்தும் “கல்லூரி சந்தை” இன்று முதல் 17.03.2023 வரை மூன்று நாள் நடைபெறுகிறது. இதன் முதல் நாளான இன்று தொடக்க விழாவில் நமது கல்லூரி முதல்வர் திருமதி. முனைவர் J.பூங்கொடி அவர்கள் தலைமையில் கல்லூரி செயலாளர் திரு. P.S.P.K. சோமு அவர்களின் முன்னிலையில் வரவேற்று தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.மரு.வீ.ரெ.வீரபத்திரன், B.S.M.S.M.D. இணை இயக்குநர் மகளிர் திட்டம், தூத்துக்குடி மற்றும் திரு.ஜ.ரூபன் ஆஸ்டின், மேலாளர் வழங்கல் விற்பனை சங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி சந்தையை பார்வையிட்டு பாராட்டினார்கள். இந்த கல்லூரி சந்தையில் செயற்கை நகைகள், fancy பொருட்கள், லேடிஸ் பேக், அழகு பொம்மைகள், சங்கு பொருட்கள் போன்ற என்னற்ற அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு அழகு பொருட்களை வாங்கி சென்றனர். இந்த விழாவில் பொருளாதார துறை தலைவர் திருமதி. முனைவர் R.பிரபாவதி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.