Home Events - Kamaraj College கலை இலக்கிய விழா

கலை இலக்கிய விழா

காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி. தமிழ்த்துறை சார்பாக 30.8.22 அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. கலை இலக்கிய விழாவை முன்னிட்டு கட்டுரை, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் க. திலகவதி அவர்கள் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து இவ்விழாவினை நடத்தினர். ச.சுமித்ரா இளங்கலைத்தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி விழாவினைத் தொகுத்து வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வாழ்த்தோடு- விழா இனிதே தொடங்கியது. வரவேற்புரையை மூன்றாம் ஆண்டு மாணவி த.காளிமுகிலா வழங்கினார். துணை முதல்வர் முனைவர் அ.அருணாசல ராஜன் அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரான பொருளாதாரத் துறைத் தலைவர் முனைவர் ச.ராமன் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தலைமையுரையை நிகழ்த்தினார். மூன்றாம் ஆண்டு மாணவி வர்ஷினி தமிழ்த்தாயை வர்ணித்து சொற்பொழிவாற்றினார். இரண்டாம் ஆண்டு மாணவன் பாரதி கண்ணன் அமிழ்தினும் இனிது எம் தமிழ் மொழி எனும் தலைப்பில் தன் கவிதையை வாசித்தார் .முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டு இளங்கலைத்தமிழ் மாணவ மாணவியர் இணைந்து இந்திய பாராளுமன்றம் என்ற குழுவை உருவாக்கி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் முறையில் விவாதம் நடத்தினர். நன்றியுரையை மூன்றாம் ஆண்டு மாணவி நா. சங்கரேஸ்வரி நிகழ்த்தினார். நாட்டுப்பண் பாடப்பட்டது விழா இனிதே நிறைவடைந்தது.

Leave A Reply