
கண்தான விழிப்புணர்வு கூட்டம் – விடுதி மாணவ, மாணவியர்கள்
காமராஜ் கல்லூரி மாணவ,மாணவியர் விடுதியும் மற்றும் சஷம் தேசிய அமைப்பும் இணைந்து 5.9.2023 அன்று கண்தான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சஷம் மாநிலச் செயலாளர் G.முத்து மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தேசிய கண்தான விழிப்புணர்வு சார்பாக இரு வார விழாவாக குமரி முதல் மதுரை பட்டினம் வரை வாகன பயணம் மேற்கொண்டு வருகிறார். கண் தானம் செய்வதின் முக்கியத்துவத்தையும் மற்றும் குறிப்பாக மாணவர்களின் மத்தியில் கண் தானம் மீதான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். ஒவ்வொரு தனி மனிதனும் கண் தானம் செய்ய முன்வர வேண்டும். ஒப்பற்ற விழிகள் வீணாவதை தவிர்க்க வேண்டும். பார்வையற்றோர் இல்லாத பாரதம் உருவாகிட அனைவரும் கண்தானம் செய்திட உறுதிமொழியேற்போம் என்று உறை ஆற்றினார். இன் நிகழ்வின் முடிவாக உயர் திரு. ராஜா காந்தி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். கல்லூரியின் விடுதி மாணவ, மாணவிகள் மற்றும் முதல்வர், துணை முதல்வர்,விடுதி காப்பாளர் Dr. ராமன் மற்றும் Dr.மதுமிதா ஆகியோர் கலந்துகொண்டனர்.