Home Events - Kamaraj College ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் – NSS Units: 54 & 56

ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் – NSS Units: 54 & 56

பள்ளிக் கல்வித்துறை சார்பாக நம் காமராஜ் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான ஒருநாள் சிறப்புக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விளத்திகுளத்திற்கு உட்பட்ட சிவஞானபுரம் அரசுப்பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் பங்குகொண்டனர். இந்நிகழ்வில் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான முக்கியத்துவத்தையும்,நம் கல்லூரியில் இருக்கும் பாடப்பிரிவுகள் மற்றும் மாணவர்கள் நம் கல்லூரியில் படிப்பதனால் கிடைக்கும் பயன்பாடுகள் குறித்தும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜே.பூங்கொடி அவர்கள் மாணவர்களிடம் கலந்துரையாடினார்கள். மாணவர்களும் பாடப்பிரிவுகள் சார்ந்த ஐயப்பாடுகளை கேட்டறிந்து கொண்டனர்.எந்தெந்தப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படித்தால் தன்வாழ்வின் இலக்கை எட்டமுடியும் எனவும், அரசு அங்கீகார பாடப்பிரிவுகளையும், சுயநிதிப்பிரிவுகளையும் பற்றி உதவிப்பேராசிரியர் முனைவர். கோபாலகிருஷ்ணன்அவர்கள் விளக்கியுரைத்தார். பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு, கல்லூரி வளாகங்களை நாட்டுநலப்பணித்திட்ட அணிஎண் 54 & 56 தன்னார்வ மாணவர்களால் மாணவர்களுக்கு சுற்றிகாட்டப்பட்டது. இதனை அலுவலக கண்காணிப்பாளர் திரு.சரவணன், திட்ட அலுவலர்கள் உதவிப்பேராசிரியர்கள் பா.ஆனந்த்,மா.அய்யனுராஜ் ஆகியோர் உடனிருந்து செய்திருந்தனர்.

Leave A Reply