
உலக தாய்ப்பால் வார விழா – UBA
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் (AISHE code : 41209) சார்பில் உலக தாய்ப்பால் வார விழா – ஆகஸ்ட் , 2024 மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அரோகியம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சேர்வைகாரன் மடம் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் திருமதி G. ஜெபக்கனி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் பேரில், உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் , மற்றும் கிராம அங்கன் வாடி பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஆங்கில துறை பேராசிரியை உன்னத பாரத் இயக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் .A. சுபாஷினி அவர்கள் ” கருவுற்ற தாய்மார்கள் நலம் பேணுதல் மற்றும் தாய்ப்பால் வார விழா முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்கள். இந்த ஆரோக்கியம் சார்ந்த சமூக பணிகளின் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் “மதர் ஹார்லிக்ஸ் பெட்டகம்” மற்றும் அங்கன்வாடி ஊட்ட சத்து கொழுக்கட்டை வழங்கப்பட்டது. கிராம பஞ்சாயத்து செயலர் திருமதி.மாரியம்மாள் அவர்கள் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உன்னத பாரத் இயக்கம் மாணவர் (பொறுப்பாளர்கள் தாவரவியல் பிரிவு) S. ரவி குமார், மற்றும் P. சஹரிய ரோஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.