
இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் – தமிழ்த்துறை
காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறையும் (சுயநதிப்பிரிவு) பிரணவ் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழும் இணைந்து “இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்” எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கை நடத்தினர். பன்னாட்டு கருத்தரங்கின் நோக்கமானது ISSN எண்ணோடு ஆய்வுக் கோவையாக வெளியிடுவது ஆகும். அத்தகைய நோக்கில் ஆய்வுக் கோவை வெளியிடப்பட்டது. மொத்தம் 50 ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வுக் கோவையில் இடம் பெற்றுள்ளன. நம் தமிழ்த் துறை மாணாக்கர்கள் 9 பேர் ஆய்வுக் கோவையில் கட்டுரைகளை எழுதியுள்ளனர். பேராசிரியப் பெருமக்கள் முனைவர் க. திலகவதி, முனைவர் சு. ராஜலக்ஷ்மி, முனைவர் ஜெ.ராஜசெல்வி, முனைவர் க. சுப்புலட்சுமி, முனைவர் ந.சரண்யா, திருமதி ஜெயலட்சுமி, திருமதி சி.தேவி ஆகியோர் தங்கள் கட்டுரைகளை ஆய்வுக் கோவையில் எழுதியுள்ளனர். இலங்கையில் இருந்து மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒரு ஆய்வுக் கட்டுரை ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் பன்னாட்டு கருத்தரங்க ஆய்வுக் கோவையை முதலில் வெளியிட்டமை நம் கருத்தரங்கின் சிறப்பாகும். பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்தும் கட்டுரைகள் வந்தன. ஆய்வுக் கட்டுரைகள் நூலாக்கம் பெற்று மின்னியல் ஆய்விதழாகவும், புத்தகமாகவும் வெளிவந்துள்ளன. நம் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ.பூங்கொடி அவர்கள், துணை முதல்வர் முனைவர் அஅருணாச்சல ராஜன் அவர்களது வாழ்த்துரையோடு புத்தகம் வெளிவந்துள்ளது. தமிழ்த் துறைப் பேராசிரியர்களின் அணிந்துரையோடு புத்தகம் சிறப்புற அமைந்துள்ளது.