Home Events - Kamaraj College இரத்த தான முகாம் – UBA

இரத்த தான முகாம் – UBA

தூத்துக்குடி சேவா பாரதி, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ( 12.01.2025) விவேகானந்தா இரத்த தான கழகம் சார்பில் சிறப்பு இரத்த தான முகாம் காமராஜ் கல்லூரியில் வைத்து நடை பெற்றது. இந்த இரத்த தான முகாமினை கல்லூரி செயலர் உயர் திரு.P.S.P.K.J . சோமு என்ற சோம சுந்தரம் அய்யா அவர்கள் துவக்கி வைத்தார்கள். வரலாற்று துறை தலைவர் முனைவர். A. தேவராஜ், கல்லூரியின் உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. நாகராஜன், மருத்துவர் S.R. ருக்மணி, A. செந்தில் ஆறுமுகம் , சரவனாஸ் ஹோட்டல் , அகில பாரதீய வித்தியார்தி பரிஷத் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் சுவாமி விவேகானந்தரின் திரு உருவ வேடம் புனைந்து வந்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave A Reply