Home Events - Kamaraj College ஆயுத பூஜை 2024

ஆயுத பூஜை 2024

நமது காமராஜ் கல்லூரியில் ஆயுத பூஜை 2024 கலை மகள் விழா மற்றும் நவராத்திரி கொலு 9ம் நாள் விழா (11 – 10 – 2024) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி வளாகத்தில் உள்ள ஶ்ரீ முக விநாயகர் ஆலயத்தில் உள்ள கொலு விழா மற்றும் கல்லூரி அலுவலகம், முதல்வர் பிரிவு, நூலகம், தேர்வு கட்டுப்பாட்டு மையம் மற்றும் பிற அலுவல்கள் மையங்களில் நடை பெற்ற கலை மகள் வழிபாடு நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் உயர்திரு. P.S.P.K.J. சோமு என்ற சோம சுந்தரம் அவர்கள், கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. பூங்கொடி, துணை முதல்வர் முனைவர் A. அசோக், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், பெரியோர்கள், அலுவலக கண்காணிப்பாளர் திரு. பு. சரவணன் அவர்கள், கல்லூரி தேர்வு கட்டுப்பாடு மைய தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் K. பானுமதி , டீன் ஆப் சயின்ஸ் முனைவர் T. பொன்ரதி, ஆராய்ச்சி துறை அறிவியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் G. வான்மதி, கல்லூரி நூலகர் திரு. தமிழரசன் அவர்கள், உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ .நாகராஜன், மற்றும் அலுவலக பணியாளர்கள், பேராசிரியர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர். காலை உணவு மற்றும் பிரசாதம் வழங்க பட்டது. உற்சாகத்துடன் பக்தி மனம் கமழ தசரா பண்டிகையின் முக்கிய நிகழ்வான கலை மகள் விழா சிறப்பாக நடை பெற்றது.

Leave A Reply