
ஆதார் அட்டை பதிவு & திருத்த சேவை முகாம் – UBA
செப்டம்பர் 22 , 2024 ஞாயிற்று கிழமை, ஆதார் அட்டை பதிவு , திருத்த சேவை முகாம் தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரமடம் கிராம பஞ்சாயத்து, சிவஞான புரம் பகுதியில் நடைபெற்றது. ஒன்றாம் வார்டு உறுப்பினர் திருமதி V.காளீஸ்வரி வெற்றிவேல் அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார்கள். காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் ( AISHE Code: 41209) அலகு சார்பில் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு கிராம பொது மக்களை சந்தித்து முகாமில் பங்கு பெற செய்தனர். வரிசைகளை ஒழுங்குபடுத்தும் பணிகளையும் , முகாம் நடைபெறும் தகவலை வீடு வீடாக தெரிய படுத்தினார்கள். கிராம நிர்வாக செயலர் உடன் இணைந்து உன்னத பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.