Home Events - Kamaraj College ஆட்சி மொழி விழிப்புணர்வுப் பேரணி – Dept. of Tamil

ஆட்சி மொழி விழிப்புணர்வுப் பேரணி – Dept. of Tamil

20.12.2024 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ஆட்சி மொழி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முத்துநகர் கடற்கரை வரை நடந்தது. இப்பேரணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப. அவர்கள் தலைமையுடன் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி. கீதாஜீவன் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்கள். தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி பி. ரெஜினாள் மேரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் இப்பேரணி நடந்தது. இப்பேரணியில் காமராஜ் கல்லூரியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த்துறை மாணவர்கள் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று முழக்கமிட்டவாறு கொடியேந்தி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவ்விழாவை காமராஜ் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ.பூங்கொடி மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர். செ.கஸ்தூரி அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து மாணவர்களை வழிநடத்திச் சென்றார்கள். அவர்களுடன் இணைப்பேராசியர் முனைவர் மா. முரளி, உதவிப் பேராசிரியர்கள் முனைவர் மு.செல்வி, திரு. பா. கண்ணன் அவர்களும் பங்கேற்றார்கள். இத்துடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது

Leave A Reply