
SEAS-2023 – கல்வி அடைவுத் தேர்வு – NSS Units 54, 55, 56, 145, 146 & 181
“தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு” நடத்தும் SEAS -எனப்படும் கல்வி அடைவுத்தேர்வு 03-11-2023 (வெள்ளிக்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடைபெற்றது.அதற்காக நம் காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அணிஎண்கள் 54, 55, 56, 145, 146, 181 சார்பாக நம் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சியில் மாணவர்கள் பங்கேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் 02-11-2023&03-11-2023 ( வியாழன் & வெள்ளி) ஆகிய இரண்டு தேதிகளில் சிறப்பான முறையில் தேர்வினை நடத்தி தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவர்களால் ஒப்படைக்கப்பட்டது.அதற்கான பயணப்படித் தொகையினை இன்று திரு.சத்யசீலன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (பள்ளிக்கல்வித்துறை) மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனம் தலைமை விரிவுரையாளர் A.ஜெபா,விரிவுரையாளர் J.ரமணி அவர்களால்,கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்கள் முன்னிலையில் காமராஜர் கல்வியரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இத்தேர்வு சிறப்பாக நடைபெறக் காரணமான கல்லூரி நிர்வாகம்,முதல்வர்,பேராசிரியர்கள்,அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் நாட்டு நலப்பணித்திட்ட அணிகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நிகழ்வினை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் திரு.மா.அய்யனுராஜ் ,உதவிப்பேராசிரியர் உடனிருந்து செய்திருந்தார்.