சட்ட விழிப்புணர்வு முகாம் – NSS Units: 54,55,56,145,146 & 181
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் மற்றும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அணிஎண்கள் 54,55,56,145,146,181சார்பாக கல்லூரி வளாகத்திற்குள் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று 26-10-2026 ( திங்கள் கிழமை ) நடைபெற்றது. நிகழ்வில் தூத்துக்குடி நீதிமன்ற வழக்கறிஞர் பாலமுருகன் மற்றும் வழக்கறிஞர் ராம்ஜி பதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துரைத்தார்கள். நீதிமன்ற அலுவலர் சண்முகப்பிரியா அவர்கள் விழிப்புணர்வு முகாம் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் 80 மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வு குறித்த கருத்துகளை கேட்டு பயனடைந்தனர்.நிகழ்வை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
