Home Events அஞ்சல் சமூக வளர்ச்சி விழா – NSS Units: 54 & 56

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா – NSS Units: 54 & 56

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், தலைமை தபால் நிலையம், நாட்டுநலப்பணித் திட்ட அணி எண் 54 & 56 மாணவர்களை இணைத்து 21-09-2023 (வியாழன்)- இன்று அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக நம் கல்லூரியின் மேனாள் மாணவர் வணிக நிர்வாக அலுவலர் திரு.பொன்ராம்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். முதல்வர் முனைவர் J.பூங்கொடி அவர்கள் வாழ்த்துரை வழங்கிட, உதவிகோட்ட கண்காணிப்பாளர் திருமதி.வசந்த சிந்துதேவி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். உட்கோட்ட ஆய்வாளர் திரு.சுப்பையா அவர்கள் “இன்றைய முதலீடு, நாளைய சேமிப்பு” என்னும் தலைப்பில் அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்தும்,கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு குறித்தும் மாணவர்களுக்கு பயன்தரும் கருத்துகளை வழங்கினார்கள். இவ்விழாவில் 300 மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் திரு.மா.அய்யனுராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கிட விழா இனிதே நிறைவு பெற்றது.

Date

Sep 21 2023
Expired!

Time

10:30 am

Location

Seminar Hall - Golden Jubilee Block

Leave A Reply