வெள்ள நிவாரண பணிகள் மற்றும் கள ஆய்வுகள் – NSS Units: 216, 219 & 243
கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர் ஆலோசனையின் பேரில் வெள்ள இடர்பாடுகளினால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 7 மாணவர்கள் நிவாரண பணிகளையும் கள ஆய்வு மேற்கொண்டனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனை பேரில் ஊர் பொதுமக்கள் உடன் கலந்துரையாடி டிசம்பர் 2023 மழை வெள்ள பாதிப்புகளில் பாதிப்பு அடைந்த பொது மக்களின் வாழ்வாதாரம் சுகாதாரம் குடியிருப்பு பகுதியில் கட்டுமானம் , நீர் வழித்தடம், குளக்கரை பாதைகள் , ஏற்பட்ட சேதங்கள், குறித்து புள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி நடைபெற்றது. நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் முறையே திரு. R. ரமேஷ்கண்ணன் (NSS UNIT : 219), திருமதி. K. கல்யாணி (NSS UNIT : 216) மற்றும் திரு.S. சமுத்திரபாண்டி (NSS UNIT : 243) தலைமையில் இரு மாணவ குழுவினர் காந்திநகர் (ஆழ்வார்திருநகரி), மற்றும் புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் பணிகளை மேற்கொண்டனர்.
