Home Events - Kamaraj College வெள்ள நிவாரண பணிகள் மற்றும் கள ஆய்வுகள் – UBA and NSS Unit: 55 & 181

வெள்ள நிவாரண பணிகள் மற்றும் கள ஆய்வுகள் – UBA and NSS Unit: 55 & 181

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள் 55 மற்றும் 181, உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் (UBA) கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி முதல்வர் ஆலோசனையின் பேரில் வெள்ள இடர்பாடுகளினால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 20 மாணவர்கள் நிவாரண பணிகளையும் கள ஆய்வு மேற்கொண்டனர். கிராம பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனை பேரில் ஊர் பொதுமக்கள் உடன் கலந்துரையாடி டிசம்பர் 2023 மழை வெள்ள பாதிப்புகளில் பாதிப்பு அடைந்த பொது மக்களின் வாழ்வாதாரம் சுகாதாரம் குடியிருப்பு பகுதியில் கட்டுமானம், நீர் வழித்தடம், குளக்கரை பாதைகள், குறித்து புள்ளி விவரங்கள் சேகரிப்பு பணி நடைபெற்றது. UBA ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் முறையே முனைவர் ஜெ.நாகராஜன் (UBA), மற்றும் முனைவர் ஒ.நேத்தாஜி (NSS UNIT : 55) மற்றும், முனைவர் ஆ.இசக்கிமுத்து (NSS UNIT : 181) தலைமையில் ஒரு மாணவ குழுவினர் தங்கம்மாள்புரம், சக்கம்மாள்புரம் மற்றும் சேர்வைகாரன்மடம் ஆகிய பகுதிகளில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகளில் பணிகளை மேற்கொண்டனர்.

Leave A Reply