
விழிப்புணர்வு நிகழ்வு – தமிழ்த்துறை
12.9.24 அன்று காமராஜ் கல்லூரியின் (சுயநிதிப்பிரிவு) தமிழ்த் துறையில் விழிப்புணர்வு குறித்த உரை நிகழ்ந்தது. திருமதி மு.செண்பககாசி M.A., M.Phil – Rj vividhi bharati – FM அவர்கள் “உணவும் உணர்வும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினார். இந்நிகழ்வை தமிழ்த்துறை மாணாக்கர்கள் ரா. ராமலட்சுமி, ரா அரவிந்த் பா.ஆனந்தகுமார் ஒருங்கிணைத்து நடத்தினர். சோலைராஜா இந்நிகழ்வின் தொகுப்பாளராக இருந்தார். வரவேற்புரையை ஆனந்தகுமார் இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு மாணவன் ஆற்றினார். நன்றி உரையை முதலாமாண்டு மாணவி மு பரமேஸ்வரி வழங்கினார். துணை முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், தமிழ்த்துறை மாணாக்கர்கள், தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வு இனிதே முடிந்தது.