
விரும்பியதைச் செய்: போட்டி – உலக மகளிர் தின விழா 2023
பிற்பகல் 2.00 மணி அளவில் மாணவிகளுக்கான “விரும்பியதைச் செய்” என்னும் தலைப்பிலான போட்டி நடைபெற்றது. இதில் 12 குழுக்களில் இருந்து 60 மாணவியர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு பெண்மையைப் போற்றுவதாகவும் பெண்களின் முன்னேற்றத்தை வெளிப்படுத்தவதாகவும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் முறையை எடுத்துரைப்பதாகவும் அமைந்திருந்தது. கண்களுக்கு விருந்தாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். போட்டியின் நிறைவில் வணிகவியல் துறை (Aided) மாணவிகள் முதல் இடத்தையும், விளையாட்டுத்துறை (SF) மாணவிகள் இரண்டாம் இடத்தையும், ஆங்கிலத்துறை (SF) மாணவிகள் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
In ‘As you like it’ 60 participants from 12 groups participated emphasizing the role of women, the most needed empowerment and the menace they face in society. The first prize was won by the students of Commerce department (Aided) followed by the department of Physical Education (SF) in the second place and department of English (SF) in the third.