Home Events வாசகர் வட்டம் தொடக்க விழா – தமிழ்த்துறை

வாசகர் வட்டம் தொடக்க விழா – தமிழ்த்துறை

பொருநை இலக்கியத் திருவிழாவை முன்னிட்டு 24.01.2024 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறையும் (சுயநிதிப்பிரிவு), காமராஜ் இலக்கியக் கழகமும் இணைந்து ‘வாசகர் வட்டம்’ என்னும் விழாவை நடத்தியது. இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி ரியானி தொகுப்புரை வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் செல்வி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். “படைப்புக்கலைத்திறன் வினா நிகழ்வு”‘ என்னும் தலைப்பில் எழுத்தாளர் திரு ப. ஸ்ரீதர கணேசன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். படைப்புத் திறனை எவ்வாறு வளர்ப்பது என்பது தொடர்பான கேள்விகளை மாணவ, மாணவிகள் கேட்டனர்.சிறப்பு விருந்தினர் அவர்கள் மாணவர்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகப் பதிலளித்தார். மேலும் சிறந்த வினாக்களைத் தொடுத்த மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறுகதை, நாவல், இலக்கியம் தொடர்பான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவன் செ. சஞ்சய் நன்றியுரை வழங்கினார்.தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.நாட்டுப் பண்ணோடு விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Jan 24 2024
Expired!

Time

11:00 am

Location

Bharathiyar Block

Leave A Reply