
வாக்காளர் விழிப்புணர்வு போட்டி – NSS Units 54, 55 & 56
தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட எழுத்தறிவு கழகம் , முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு-2024- சார்பாக “வாக்களிப்பதே சிறந்தது-நிச்சயம் வாக்களிப்பேன்” என்னும் தலைப்பில் 27-09-2024 (வெள்ளிக்கிழமை)-இன்று காமராஜ் கல்லூரி,தூத்துக்குடியில் கட்டுரை,ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி, துணைமுதல்வர் முனைவர் அசோக் அவர்களின் வழிகாட்டலில் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.இப்போட்டிகளை தேர்தல் எழுத்தறிவு இயக்க கல்லூரி ஒருங்கிணைப்பாளர் மா.அய்யனுராஜ், உதவிப்பேராசிரியர் அவர்கள் நடத்தினார். இப்போட்டியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்றனர். இப்போட்டிகளை நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களைக் கொண்டு 54, 55 & 56 திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.