
வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம் – NSS Units 54 & 56
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் தூத்துக்குடி மாவட்ட கல்லூரிகளில் “இளம் வாக்காளர் பெயர் சேர்த்தல்” முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நம் காமராஜ் கல்லூரியில் இன்று(08-12-2023)முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் G.ஞானராஜ், தூத்துக்குடி வட்டாட்சியர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு “நிச்சயம் வாக்களிப்பேன்” என்னும் தலைப்பில் வாக்களித்தல் தொடர்பான கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் J.பூங்கொடி அவர்கள் தலைமைதாங்கினார்கள். துணைமுதல்வர் முனைவர் A.அசோக் அவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இம்முகாமில் 250 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வினை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் உதவிப்பேராசிரியர் பா.ஆனந்த் (அணி எண்-54), உதவிப்பேராசிரியர் மா.அய்யனுராஜ் (அணி எண்-56) ஆகியோர் செய்திருந்தனர்.