ரமேஷ் பிளவர் நிறுவனம்: காலா ஒலிம்பிக் 2025 – Physical Education Dept.
இன்று 18/01/2025 தூத்துக்குடியில் இருக்கும் ரமேஷ் பிளவர் நிறுவனம் காலா ஒலிம்பிக் – 2025, விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக தொடங்கின. இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொடுப்பதற்காக நமது காமராஜர் கல்லூரியின் விளையாட்டுத்துறையை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து 14 வாரம் சனிக்கிழமை மட்டும் நடத்த இருக்கிறோம், அதன் தொடக்கமாக இன்று ஒலிம்பிக் ஜோதி ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர். இதில் ரமேஷ் பிளவர் கம்பெனியில் வேலை செய்யும் 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நமது கல்லூரியின் விளையாட்டு துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் சிறப்பாக நடத்தினர். இந்த நிறுவனத்தின் CEO நமது மாணவர்களை வெகுவாக பாராட்டினார்.
