
முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு – தமிழ்த்துறை
21.03.2023 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும் காமராசர் கலை இலக்கியக்கழகமும் இணைந்து முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணாக்கர்கள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவி ரியானி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் செல்வி அவர்கள் முன்னாள் மாணாக்கர்களை வரவேற்றுப் பேசினார். தமிழ்த்துறை இந்நாள் 110 மாணாக்கர்களோடு, முன்னாள் மாணவர் பா. கண்ணன் கலந்துரையாடினர். கல்லூரியில் தாங்கள் படித்த போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், தங்களது தற்போதைய வாழ்வையும் எடுத்துரைத்தனர். தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்றாம் ஆண்டு ம.பாரதிகண்ணன், வீ.கனகலெட்சுமி, அ.ராஜகப்பல், லி.பால லிங்ககனி ஆகியோர் முன்னாள் மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து முன்றாம் ஆண்டு மாணவி அஸ்வதி ராதா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முழுவதுமாக முதலாம் ஆண்டு மாணவன் சோலைராஜா தொகுத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவடைந்தது.