
போதைப் பொருள் ஒழிப்பு பேரணி
தூத்துக்குடி,காமராஜ் கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு சங்கம்,பகடிவதை மற்றும் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பாக விழிப்புணர்வு பேரணி 26-06-2024 இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் J.பூங்கொடி சிறப்பு விருந்தினர்களை வரவேற்று போதைப்பொருளின் தீங்கு குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் L.பாலாஜி சரவணன் அவர்கள் போதைப்பொருள் உறுதிமொழியை மாணவர்களுக்கு ஏற்கச் செய்து, இளமைப் பருவம்,கல்லூரிப் பருவம் மற்றும் போதைப்பொருளால் வாழ்வைச் சிதைத்திடும் இளைஞர்களின் இன்றைய நிலை, போதைப்பொருளைக் கட்டுப்படுத்த மாணவர்கள் எடுக்கும் முயற்சிகள், போதைப்பொருள் ஒழிப்பு குறித்த ரகசிய எண் குறித்த கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.செந்தில் இளந்திரையன் மற்றும் பல காவல் ஆய்வாளர்களும் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள். விழாவின் நிறைவாக காமராஜ் கல்லூரி வளாகத்திலிருந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கிவைக்க பேரணி சிறப்பாக நடைபெற்றது. இதில் 450 மாணவர்கள் கலந்துகொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளை நாட்டுநலப்பணிதிட்டம் 54- அலுலர் உதவிப்பேராசிரியர் திரு.பா.ஆனந்த் (பகடிவதை ஒருங்கிணைப்பாளர்) மற்றும் 56 – திட்ட அலுவலர் உதவிப்பேராசிரியர் திரு.மா.அய்யனுராஜ் (போதைப்பொருள் ஒருங்கிணைப்பாளர்), அலுவலக கண்காணிப்பாள திரு சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.