
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு – NSS Units: 55 & 56
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி போதைப்பொருள் மற்றும் பகடிவதை சார்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 16-10-2024 -ல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி மற்றும் துணை முதல்வர் முனைவர் அசோக் அவர்களின் ஆலோசனைப்படி இந்நிகழ்வு மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. “மாணவர் சூழலும் சூழ்நிலையும்” என்னும் தலைப்பில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் திரு.பா.ஆனந்த் மாணவர்களுக்கு கால மாற்றங்களும் ,மாணவர்கள் சமூகத்தில் எதிர் நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் அதிலிருந்து மாணவர்கள் தன்னைக் காத்து வாழ்வை மாற்றிக்கொள்ளும் முறைமை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்வை போதைப்பொருள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மா.அய்யனுராஜ் (அணி எண் 56), முனைவர் ஓ.நேத்தாஜி (அணி எண் 55) ஆகியோர் செய்திருந்தனர்.