
போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு – NSS Units: 54 & 56
தூத்துக்குடி, காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் மற்றும் தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சார்பாக, போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்வு 23-07-2024(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வை கல்லூரி போதைப்பொருள் ஒழிப்பு சங்க ஒருங்கிணைப்பாளரும்,நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளருமான திரு.மா.அய்யனுராஜ் (அணிஎண்-56) அவர்கள் ஏற்பாடு செய்ததுடன் விழாவின் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றும் பேசினார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் எழில் சுரேஷ் (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு) அவர்கள் பங்குபெற்று, இன்றையத் தலைமுறையினர் போதைப்பொருள் தாக்கத்தினால் சந்திக்கும் விளைவுகளையும்,மாணவர்கள் அத்தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்வில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளர்களும் உடனிருக்க விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் போதைப்பொருள் ஒழிப்புச் சங்க மாணவத் தலைவர், இயற்பியல் இரண்டாமாண்டு மாணவன் சிவ சூரியா, மற்றும் துணைத்தலைவர், பொருளியல் துறை மாணவன் சஞ்சய் குமார் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனை பகடிவதை ஒருங்கிணைப்பாளரும், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலருமான திரு.பா.ஆனந்த் (அணிஎண்-54) உடனிருந்து சிறப்பாக நடத்தினார்.