
பொது சுகாதார விழிப்புணர்வு முகாம் – UBA
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் (AISHE code : 41209) மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இடையே செய்து இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடிப்படையில், செலவினம் இல்லா மற்றும் குறைந்த செலவினம் திட்ட பணிகளுக்கு கீழ் திறன் மேம்பாடு பயிற்சி, பொது சுகாதார விழிப்புணர்வு முகாம் 21- 03- 2024 அன்று துவங்கியது. நீர் தன்னிறைவு கிராமம், சுகாதார கிராமம், வேலையின்மை இல்லா கிராமம், சமூக நீதி கிராமம் எனும் பல்வேறு கருத்துரு கொண்டு மாணவ மாணவியர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள இருக்கின்றனர். கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர் . ஜெ.பூங்கொடி மற்றும் உன்னத பாரத் அபியான் உயர் மட்ட ஐ ஐ டி, புது தில்லி, காந்தி கிராம் பல்கலைகழகம் மண்டல உன்னத பாரத் திட்ட அலகு ஆலோசனை பேரில் முகாமிற்கான ஏற்பாடுகளை அதன் ஒருங்கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.