
பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா நம் கல்லூரியில் திறந்த வெளி அரங்கில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்குசெந்தமிழ் இலக்கிய மன்ற மாணவத்தலைவர் வரவேற்புரை வழங்க கல்லூரிச்செயலாளர் தலைமையில் கல்லூரி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி அகில இந்திய வானொலி தொகுப்பாளர் (.ப.நி) முனைவர் சந்திர புஸ்பம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
காமராஜ் அவர்களின் பிறந்தநாள் விழாவில் தூதத்துக்குடி காமராஜ் கல்லூரியின் கல்விச்சேவையைப் பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர் என். ரவி அவர்கள் காமராஜ் கல்லூரிச்செயலாளர் அவர்களுக்கு வழங்கிய விருதினைக் கல்லூரிச்செயலாளர் கல்லூரி முதல்வருக்கு வழங்கியது சிறப்பு நிகழ்வாக அமைந்திருந்தது.
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப்பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம்பெற்ற பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சுழல் கோப்பை வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்சிகளும் சிறப்பாக இடம்பெற இலக்கிய மன்ற மாணவி நன்றியுரை வழங்கினார். இவ்விழா நிகழ்வுகளைத் தமிழ்த்துறைப்பேராசிரியர்கள் மிகச்சிறப்பாக வழிநடத்தினார்கள்.தேசியக் கீதத்துடன் விழா இனிதே முடிவடைந்தது.