
புத்தாக்க பயிற்சி – UBA
தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் காமராஜ் கல்லூரி உன்னத். பாரத் அபியான் (AISHE Code : 41209) இணைந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி (25 -10 -2024) நடைபெற்றது. இதில் சேர்வைக் காரன் மடம் கிராம ஊராட்சி உட்பட்ட , செம்பருத்தி குழு, ரோஜா குழு , பாச மலர் குழு உறுப்பினர்கள், ஊக்குனர்கள், பயிற்றுனர்கள், உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர். குழு விளையாட்டு, குழு கலந்துரையாடல், மணிமேகலை விருது பற்றிய விளக்கவுரை, சுயதொழில் கடன் வசதி, மகளிர்க்கு ஊராட்சியில் அதிகாரம் அளித்தல், மகிளா சபா குறித்த அமர்வுகள் நடை பெற்றது. காமராஜ் கல்லூரி உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. நாகராஜன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. சுபாஷினி ஆகியோர் புத்தாக்க பயிற்சி நிகழ்வுகளை வடிவமைத்து இருந்தனர்.