
புத்தகத் திருவிழா 2024 & போட்டிகள் – NSS Units 54 & 56
தூத்துக்குடியில் நடைபெறும் 5-வது புத்தகத் திருவிழாவினை சிறப்பிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியத் திறனை மேம்படுத்த,தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில், பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி நடைபெற்றது. இதில் 60 கல்லூரிகள் பங்குபெற்றதில் 120 மாணவர்கள் கவிதைப் போட்டியிலும்,75 மாணவர்கள் பேச்சுப்போட்டியிலும் கலந்துகொண்டு தங்களது படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வெளிக்கொணர்ந்தனர். இந்நிகழ்வின் முதலில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி, துணைமுதல்வர் முனைவர் அசோக் அவர்களும் காமராஜ் கல்வியரங்கில் மாணவர்களுக்கு போட்டிகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்கள். கவிதைப்போட்டிக்கு நடுவர்களாக தமிழ்துறை இணைப்பேராசிரியர் முனைவர்.மா.சிவபாக்கியம் மற்றும் முனைவர் ம.லெ.இராஜேஸ்வரி அவர்களும் நடுவர்களாக பங்கேற்று முதல் மூன்று மாணவர்களைத் தேர்வு செய்தார்கள். பேச்சுப்போட்டிக்கு சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியை அ.செல்வி (பணி ஓய்வு), மற்றும் K. ராஜலட்சுமி(பணி ஓய்வு)தமிழாசிரியை, (ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) அவர்களும் பங்குகொண்டு முதல் மூன்று மாணவர்களை தேர்வுசெய்தார்கள். இப்போட்டியின் ஏற்பாடுகளை காமராஜ் கல்லூரி கலைநிகழ்வு ஒருங்ககிணைப்பாளர் முனைவர் M. முத்து ஷீபா மற்றும் முனைவர் S. மாரிமுத்து அவர்களும், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு.பா.ஆனந்த் (அணி எண் 54), மற்றும் மா.அய்யனுராஜ் (அணி எண் 56) ஆகியோர் செய்திருந்தனர்.