Home Events - Kamaraj College புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா

புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழா

நமது காமராஜ் கல்லூரியில் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தின் துவக்க விழாவானது 30/12/2024 அன்று காலை நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டத்தை துவக்கி வைத்து பெண்கள் கல்வி கற்க தடையாக எது வந்தாலும் அதனை உடைத்தெறிவேன் என்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்.நமது தூத்துக்குடி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 4,700 க்கும் மேற்பட்ட மாணவியர் பயன் பெறுகின்றனர். விழா அரங்கில் 9,000 க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். நமது கல்லூரியைச் சார்ந்த மூன்றாமாண்டு கணிதவியல் துறையில் பயிலும் மாணவி செல்வி.காயத்ரி திட்டத்தால் பயனடைந்ததை குறித்துப் பேசினார். விழாவில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் திருமதி கீதாஜுவன் அவர்கள், மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை செயலாளர், வணக்கத்திற்குரிய தூத்துக்குடி மாநகரத் தந்தை எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் திரு.ஜெகன், உயர்கல்வித்துறை ஆணையர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தென்மண்டல இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் (ஐ.ஜி.பி), திருநெல்வேலி காவல்துறை ஆணையர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

Leave A Reply