
பரிசளிப்பு விழா – பொங்கலோவியம் 2023
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையைப் போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கலோவியம் என்ற பெயரில் கலைப் பண்பாடு மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு 2023 ஜனவரி 23 .24 & 25 ஆகிய மூன்று நாட்கள் இவ்விழாவானது நடைபெற்றது.
விழாவில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ / மாணவியர் கலந்துகொண்டு தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
பொங்கலோவியப் போட்டியின் முதல் நாளான 23.01.2023 அன்று காலை 10.30 மணியளவில் கலைப் போட்டியான ரங்கோலிப் போட்டி நடைபெற்றது. 16 கல்லூரிகளில் இருந்து 32 மாணவிகள் கலந்துகொண்ட இப்போட்டியில் தூத்துக்குடி வ உ சி கல்லூரி முதல் இடத்தையும், தூய மரியன்னை கல்லூரி இரண்டாம் இடத்தையும், திருநெல்வேலி எம் டி டி ஹிந்து கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
காலை 12.00 மணியளவில் நடைபெற்ற சுவரொட்டி தயாரித்தல்போட்டியில் 14 கல்லூரிகளில் இருந்து 14 மாணவ /மாணவியர் கலந்துகொண்டதில் முதல் இடத்தை தூய மரியன்னை கல்லூரியும், இரண்டாம் இடத்தை வ உ சி கல்லூரியும், மூன்றாம் இடத்தை பிரான்சிஸ் சேவியர் கல்லூரியும் தட்டிச்சென்றன.
2.00 மணியளவில் 11 கல்லூரிகளில் இருந்து 66 மாணவ / மாணவியர் கலந்துகொண்ட விளம்பரம்செய்தல் போட்டியில் எம் டி டி ஹிந்து கல்லூரி முதல்இடத்தையும், தூய மரியன்னை கல்லூரி இரண்டாம் இடத்தையும், வ உ சி கல்லூரி மூன்றாமிடத்தையும் பிடித்தன.
மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளான கபடி மற்றும் கோ – கோ போட்டிகளில் 8 கல்லூரிகள் கலந்துகொண்டதில் இவ்விரு போட்டிகளிலும் பிஷப் கால்டுவெல் கல்லூரி முதல் இடத்தையும், தூய யோவான்கல்லூரி இரண்டாம் இடத்தையும் பெற்றன.
ஆடவருக்கான கபடிப்போட்டியில் தூய யோவான்கல்லூரி முதல் இடத்தையும், தூய சவேரியார் கல்லூரியும் தட்டிச்சென்றது.
கால்பந்துப் போட்டியில் தூய சவேரியார் கல்லூரி முதல்இடத்தையும், தூய யோவான்கல்லூரி இரண்டாம் இடத்தையும்பிடித்தன.
பொங்கலோவயப் போட்டியின் இரண்டாம் நாளான 24.01.2023 நேற்று காலை 10.00 மணியளவில் நடைபெற்ற புகைப்படம் எடுத்தல் போட்டியில் 9 கல்லூரிகளில் இருந்து 9 மாணவ / மாணவியர் கலந்துகொண்டதில் தூய மரியன்னை கல்லூரி முதல் இடத்தையும், புனித சேவியர்கல்லூரி இரண்டாம் இடத்தையும், புனித ஜான்ஸ் கல்லூரி மூன்றாம் இடத்தையும் தக்க வைத்துக் கொண்டன.
அன்று காலை 11 மணியளவில் 13 கல்லூரிகளில் இருந்து கலந்துகொண்ட 13 மாணவ / மாணவியருடன் காய்கறிகளில் உருவங்களைச் செதுக்குதல் என்ற போட்டியானது நடைபெற்றது. இதில் வ உ சி கல்லூரி முதல் இடத்தையும், சாராடக்கர் கல்லூரி இரண்டாம் இடத்தையும், தூய மரியன்னை கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
காலை 12 மணியளவில் நடைபெற்ற சிகை அலங்காரம்செய்தல் போட்டியில் 16 கல்லூரிகளில் இருந்து 32 மாணவிகள் பங்கு பெற்றதில் தூய மரியன்னை கல்லூரி முதல் இடத்தையும், ஜி வி என் கல்லூரி இரண்டாம் இடத்தையும், பிரான்சிஸ் சேவியர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
பிற்பகல் 2.00 மணியளவில்நடைபெற்ற தனிநடனப் போட்டில் 14 கல்லூரிகளைச் சேர்ந்த 14 மாணவ /மாணவியர் கலந்துகொண்டு நடனமாடியதில் புனித ஜான்ஸ் கல்லூரி முதலிடமும், தூய மரியன்னை கல்லூரி இரண்டாம் இடமும், ஜி வி என் கல்லூரி மூன்றாம் இடமும் பெற்றன .
பொங்கலோவியப் போட்டியின் மூன்றாம் (நிறைவு) நாளான 25.01.2023 இன்று காலை 10.30 மணியளவில்நடைபெற்ற குழு நடனப் போட்டியில் 12 கல்லூரிகளில் இருந்து 72 மாணவ / மாணவியர் கலந்துகொண்டு சிறப்பாக நடனம் ஆடியதில் எம் டி டி ஹிந்து கல்லூரி முதல் இடத்தையும், வ உ சி கல்லூரி இரண்டாம் இடத்தையும், ஏ பி ஏ கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றன.
மூன்று நாட்களும் நடைபெற்ற கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்று முதல் மூன்று இடங்களைப்
பிடித்த மாணவச் செல்வங்களுக்குப் பரிசளிக்கும் விழாவானது இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே. பூங்கொடி துணைமுதல்வர் முனைவர் அ. அருணாசலராஜன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட மேயர் திரு .பெ. ஜெகன் பெரியசாமி அவர்களும் உதவிக்கண்காணிபாளர் திரு ஜி. சத்யராஜ் அவர்களும். ஜீம்பா நடனப் பயிற்றுனர்திருமதி .வி .சந்திரிகா அவர்களும்லந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ / மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ஷீல்டுகளை வழங்கினார்கள்..
பேராசிரியர்கள், அலுவலக அன்பர்கள், மாணவக்கண்மணிகள் ஆகியோருடைய ஒத்துழைப்புடன் விழா இனிதே நிறைவுற்றது.