
பயிற்சிப் பட்டறை நிகழ்வு – தமிழ்த்துறை
31.7.24 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறையும் (சுயநிதிப் பிரிவு) காமராசர் கலை இலக்கிய மன்றமும் இணைந்து பயிற்சிப் பட்டறை நிகழ்வை நடத்தினர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு தொடங்கியது கடவுள் வாழ்த்துப்பாடலை இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு மாணவியர் மு.பரமேஸ்வரி, செல்வ மஞ்சுளா ஆகியோர் பாடினர் .இந்நிகழ்வின் தொகுப்புரையை இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவி ஜெ.ரியானி நிகழ்த்தினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு மாணவன் பா. ஆனந்தகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு சி.சுதர்ஸனா ஐயா, ஊடகவியலாளர் மற்றும் இசைப்பயிற்றுநர் அவர்கள் இசையோடு இயைந்த கருவிகளின் பயிற்சிப் பட்டறை எனும் தலைப்பில் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளித்தார்.இசையும் தமிழும், முல்லைப் பண், அடிப்படை இசை குறித்த தகவல்கள் குறித்து விளக்கினார். இசைக் கருவிகளைக் கொண்டும் பயிற்சி அளித்தார். மாணாக்கர்களுக்கு இசை சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார். மாணாக்கர்களுக்கு இசையோடு பாடும் பயிற்சி அளித்தார். இந்நிகழ்வு மாணாக்கர்களுக்குப் பயனுள்ளதாய் அமைந்தது. துணை முதல்வர் அ.அருணாசல ராஜன் ஐயா அவர்களின் பரிந்துரைப்படி இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் மு.செல்வி முனைவர் சு.ராஜலட்சுமி முனைவர் க.சுப்புலட்சுமி முனைவர் ப.மேகலா ஆகியோர் கலந்து கொண்டனர். இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவன் ப.லட்சுமணன் நன்றியுரை கூறினார்.அனைவரும்
நாட்டுப்பண் பாடினர். நிகழ்வு இனிதே முடிந்தது.