
பன்னாட்டுக் கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள் – Dept. of Tamil
8.11.2024 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) மற்றும் காமராசர் கலை இலக்கியக் கழகம் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுக் கூறுகள்” எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தினர். அமர்வுத் தலைவராக முனைவர் சு. பானுமதி இணைப் பேராசிரியர், மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் ஏ. பி. சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி ,அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். விருந்தினரைப் பூரண கும்பம் மரியாதையோடும், கிராமியக் கலைகளோடும் வரவேற்று சிறப்பு செய்தனர். துணைமுதல்வர் அ.அருணாசல ராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். துறைத்தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். பிற கல்லூரிகளில் இருந்து மாணாக்கர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். பன்னாட்டுக் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ISBN எண்ணுடன் காமராஜ் ஆய்விதழில் புத்தகமாக வெளியிடப்படும். இந்நிகழ்வை இளங்கலைத்தமிழ் மாணாக்கர்கள், முதுகலைத்தமிழ் மாணாக்கர்கள் இணைந்து ஒருங்கிணைத்தனர். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரை, நாட்டுப்பண்ணோடு நிகழ்வு இனிதே நிறைவுற்றது.