
நெகிழி கழிவு சேமிப்பு இயக்க பேரணி 2025 – Physical Education Dept.
தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்தும் “நெகிழி கழிவு சேமிப்பு இயக்கம்” சார்பாக, 25.01.2025 அன்று முத்துநகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் அவர்கள் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு நெகிழி கழிவுகளின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நமது கல்லூரியின் உடற்கல்வியியல் துறையின் சார்பில் 30 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பரப்பினர்.