
நூல் வெளியீட்டு விழா – தமிழ்த்துறை
27.03.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும், காமராசர் கலை இலக்கியக்கழகமும் இணைந்து “நூல் வெளியீட்டு விழா” நடத்தியது . இவ்விழாவில் முதலாமாண்டு , இரண்டாமாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவன் சோலைராஜா வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவி முனைவர் க.திலகவதி அவர்கள் தலைமையுரை வழங்கினார். நம் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.செல்வி அவர்கள் எழுதிய “தமிழ் இலக்கியங்களில் வழிபாட்டு முறைகள்” மற்றும் “தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்” எனும் இரு நூல்களும், முனைவர் சு.இராஜலட்சுமி அவர்கள் எழுதியb”செம்மொழி உயிர்ப்பும் உணர்வும்” என்ற நூலின் முதல் பிரதியை, மாவட்ட மைய நூலகர் திருமதி ஜெ. லதா அவர்கள் வெளியிட்டார்கள். முதல் பிரதியை ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி இணைப்பேராசிரியர் முனைவர் நீ.கந்தம்மாள் அவர்கள் பெற்றுக் கொண்டார். நம் கல்லூரியின் துணை முதல்வர் (regular) முனைவர் அ. அசோக் அவர்களும், துணை முதல்வர் (SF) முனைவர் அ.அருணாசலராஜன் அவர்களும், வணிக செயலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் கருப்பசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். முனைவர் மு.செல்வி அவர்கள் மற்றும் முனைவர் சு.இராஜலட்சுமி அவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.bதமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவி ரியானி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முழுவதுமாக முதலாம் ஆண்டு மாணவன் சோலைராஜா தொகுத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவடைந்தது.