
நாட்டுநலப்பணித்திட்டம் சிறப்பு முகாம் – அணி எண்கள் 55 & 181
காமராஜ் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் அணி எண்கள் 55 மற்றும் 181 சார்பாக சேர்வைகாரன்மடம் மற்றும் சிவஞானயுரம் பகுதிகளில் NSS 7 நாட்கள் சிறப்பு முகாம் மார்ச் 25 முதல் நடை பெற்ற வருகிறது. சிறப்பு முகாமின் 6-வது நாளில் (30-03- 2023) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நாட்டு நலப்பணி தட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். À. வெளியப்பன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவியர்க்கு தன்னம்பிக்கை உரையாற்றினார்கள். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட அதிகாரிகள் முனைவர். 0. நேதாஜி அணி எண் ; 55 மற்றும் முனைவர் J. நாகராஐன் அணி எண் : 181 ஆகியோர் செய்து இருந்தனர்