
தேர்தல் விழிப்புணர்வு – NSS Units: 217, 241 & 244
தூத்துக்குடி மாவட்டம் காமராஜர் கல்லூரியின் NSS UNIT (217, 241, 244,)அணிகளின் சார்பாக மாணவ, மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் 26.3.23 அன்று தேர்தல் விழிப்புணர்வு எண் 1950 என்ற எண்ணை மக்களுக்கு செய்து காண்பித்தனர். காமராஜ் கல்லூரியின் முதல்வர் முனைவர் J.பூங்கொடி மற்றும் துணை முதல்வர் முனைவர். A.அருணாச்சல ராஜன் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். காமராஜ் கல்லூரி, நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். மாணவர்கள் அனைவரும் இத்தேர்தலில் கண்டிப்பாக வாக்களிப்பதாக உறுதி அளித்தனர்.