
தேசிய கருத்தரங்கம்: தமிழ் இலக்கியங்களில் பன்முக நோக்கு – தமிழ்த்துறை
08.04.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும், காமராசர் மின்னியல் ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பன்முக நோக்கு” என்னும் தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடத்தியது. இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. மூன்றாம் ஆண்டு மாணவன் ம.பாரதி கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் , துணை முதல்வர் அ.அருணாசல ராஜன் அவர்கள் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் குத்துவிளக்கு ஏற்றி இவ்விழாவைத் தொடங்கி வைத்தார்கள். நம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் தலைமையுரை வழங்கினார். துறை முதல்வர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நம் கல்லூரியின் துணை முதல்வர் அவர்கள் பொன்னாடை போர்த்தியும், நினைவு பரிசு வழங்கியும் கெளரவித்தனர். சிறப்பு விருந்தினர், வ.உ.சி.கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் மா. முத்துசாமி அவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான கருத்துக்களை மாணவர்களோடு கலந்துரையாடினார். மேலும் சிறப்பு விருந்தினர் அவர்கள் அமர்வு தலைவராக அமர்ந்து நிகழ்வினைத் தொடங்கி வைத்தார் தமிழ்த்துறைத் தலைவி முனைவர் க. திலகவதி அவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்துறைப் பேராசிரியர்கள், பிற கல்லூரி பேராசிரியர்கள், முனைவர் பட்டம் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்த்துறை மாணவ, மாணவிகள் தங்கள் ஆய்வுத் தொடர்பானக் கருத்துக்களை மாணவர்களோடு கலந்துரையாடினார்கள். ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டாம் ஆண்டு மாணவி கு.அஸ்வதி ராதா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முழுவதுமாக முதலாம் ஆண்டு மாணவன் சோ.சோலைராஜா தொகுத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவடைந்தது.